கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தத் தொழிலாளி தண்டபாணி என்பவர், பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் தனது காலை இழந்துள்ளார்.
ஒப்பந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்க தொழிற்சங்கம் வலியுறுத்தல்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பணிபுரிந்த போது, குப்பையில் பாதுகாப்பற்ற முறையில் வீசப்பட்டிருந்த மருத்துவக் கழிவு ஊசி எதிர்பாராதவிதமாக அவரது காலில் குத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான நச்சுத் தொற்று காரணமாக அவர் தனது காலை இழக்கும் சூழல் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர் தண்டபாணிக்கு அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி (PF), முழுமையான மருத்துவ நிவாரணம், வாழ்வாதார இழப்பீடு மற்றும் நிரந்தர மாற்று வேலை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டி, அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திய ‘சதன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ்’ (Sathan Solid Waste Management Service) என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அந்நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்க வேண்டும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.









Leave a Reply