ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்!

சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில், தங்களது தற்காலிகப் பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ரிப்பன் மாளிகையில் திடீரென நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.