RBI புதிய வரைவு விதிகள்: இனி 3 மாதத்திற்கு ஒருமுறை மாறும் மிதக்கும் வட்டி!

மிதக்கும் வட்டி விகிதத்தில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளின்படி, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட மிதக்கும் வட்டி விகிதக் கடன்களில், வட்டி விகிதத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யும் முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது சில கடன்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வட்டி மாற்றம் செய்யப்படும் நிலையில், புதிய முறையில் சந்தை வட்டி விகிதம் குறைந்தால் அதன் பலன் கடன் பெற்றவர்களுக்கு விரைவாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், வட்டி விகிதம் மற்றும் மாதாந்திர EMI கணக்கீடு உள்ளிட்ட கடன் விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என புதிய விதிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாற விரும்பினால், அதற்காக செயலாக்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டு, 2027 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மிதக்கும் வட்டி கடன் பெற்றுள்ளவர்களுக்கு இந்த மாற்றம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.