
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று, ஆகஸ்ட் 27ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 459 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதில் உதவிப் பொறியாளர்கள், வேளாண் அலுவலர்கள், இளநிலை அறிவியல் அலுவலர்கள், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 459 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இதன் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் 10 நபர்களுக்கு நேரடியாக பணிநியமன ஆணைகளை வழங்கினார்.











Leave a Reply