சமூக வலைதளங்களில் இளம் வயதினரை தவறான பாதைக்கு வழிநடத்தும் வகையில் உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வலசையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்சாக்கோ அளித்த புகாரில், சிலர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கட்டண அடிப்படையில் ஆபாசமான உரையாடல்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், இதனால் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் தவறான பாதைக்கு செல்லும் சூழல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் வெளியான உள்ளடக்கங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply