கோவை கோட்டம்: தமிழக அரசின் அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துநராகப் பொறுப்பேற்ற இன்பம்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
கோவையின் தலைமை நிலையக் கிளையைச் சேர்ந்த அரசுப் பேருந்தில், கோவை கோட்டத்தின் முதல் பெண் நடத்துநராக நமது அருமைத் தங்கை திருநங்கை இன்பம் அவர்கள் பெருமையுடன் பணியைத் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் சம வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசுப் பேருந்து நடத்துநர் பணியில் ஒரு திருநங்கை தன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதனைப் பயணம் புரியும் தங்கை இன்பம் அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்!









Leave a Reply