மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL முதலீட்டு திட்டம் தொடர்பாக மோசடி புகார் எழுந்துள்ளது.
இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறப்பட்டதாகவும், பின்னர் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முடியாமல் பலர் தவித்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முதலீட்டாளர்கள், சம்பந்தப்பட்ட ஏஜென்ட்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஒரு ஏஜென்டின் வீட்டில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏழு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்களிடம் பெறப்பட்ட பணம் எவ்வளவு, மோசடியில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
FQL முதலீட்டு திட்டத்தில் மோசடி புகார்? – ஏஜென்ட் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply