ஆந்திரப் பிரதேசத்தின் உத்தராந்திரா பகுதியில், பழங்குடியின மக்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
விசாகப்பட்டினத்தில் பழங்குடியின மாணவர்களுக்காக செயல்படும் ஒரே ஆங்கில வழி ஆண்கள் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ரத்து செய்யப்பட்ட GO No.3-க்கு மாற்றாக, பழங்குடியின மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய அரசாணையை முதலமைச்சர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பழங்குடியினரின் நில உரிமைகளை பாதுகாக்கும் 1/70 சட்டத்திற்கு வலுவான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வலுவான எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பழங்குடியின அமைப்பினர் அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஐடிடிஏ அலுவலகம் முன்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தை போலீசார் கலைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சிகப்பு விளக்கு சந்திப்பில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
பழங்குடியின மக்களின் கோரிக்கைகள்: அரை நிர்வாண போராட்டம் – சாலை மறியல்; போராட்டக்காரர்கள் கைது!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply