கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தற்காலிக குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகளில், 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவிய நிலையில், அங்கு இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன.
மொத்தம் 7 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் அவசரமாக வெளியேறியதால், 500-க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.









Leave a Reply