50 ஆண்டுகால கண்ணீர் கதை! பட்டா கேட்டு போராடும் அண்ணாநகர் மக்கள்!

வாழும் இடத்திற்கு உரிமை எப்போது கிடைக்கும்? அரை நூற்றாண்டாகக் காத்திருக்கும் மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியின் 10-வது வார்டு, அண்ணாநகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை அரசு பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தலைமுறைகள் கடந்தும் அதே பகுதியில் வாழ்ந்து வரும் இந்தக் குடும்பங்கள், தங்களது குடியிருப்புகளுக்கு முறையான பட்டா கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்காத இந்தப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் நல்வழி சட்ட ஆலோசனை அறக்கட்டளை வாயிலாகத் தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அண்ணாநகர் மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்துடனும் குடியிருப்பு உரிமையுடனும் தொடர்புடைய இந்தப் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.