தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் பகுதியில் உள்ள RIMS அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பெரும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி இரவு சுமார் 11.40 முதல் 11.50 மணியளவில், மருத்துவமனையின் சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏசி யூனிட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வார்டு முழுவதும் திடீரென அடர்ந்த புகை சூழ்ந்தது.
அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த பச்சிளம் குழந்தைகளை மீட்க மருத்துவமனை ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டனர். கண்ணாடிகளை உடைத்தும் குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் மின் மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதிலாபாத் RIMS மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து! – ஏசி வெடித்ததில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply