தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்திக்கான போதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும், தற்போது மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மழை குறைந்ததால் நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின்சாரமும் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் வெளியில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“கடந்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்திக்கு எதுவுமே செய்யவில்லை” என திமுக ஆட்சியை நேரடியாக குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, தற்போதைய மின்சாரப் பிரச்சினைக்கு காரணங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு விவகாரத்தில் மழை, காற்று, மின் உற்பத்தி திட்டங்கள் என அமைச்சர் முன்வைத்துள்ள காரணங்கள் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளன.










Leave a Reply