குட்டி யானை – 10 நிமிடங்கள் CPR செய்து உயிரைக் காப்பாற்றிய மீட்புப் படை வீரர்!

தாய்லாந்தில் இருசக்கர வாகனம் மோதியதில் மயக்கமடைந்த குட்டி யானைக்கு, மீட்புப் படை வீரர் ஒருவர் சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து CPR முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சாலையில் மயங்கிக் கிடந்த குட்டி யானையை மீட்புப் படையினர் மீட்டனர். அப்போது அதன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அங்கு வந்த மீட்புப் படை வீரர் ஒருவர் உடனடியாக CPR முதலுதவியை தொடங்கினார்.
சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிக்குப் பிறகு, குட்டி யானை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது. தொடர்ந்து அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரைக் காப்பாற்ற போராடிய மீட்புப் படை வீரரின் இந்த மனிதநேய செயல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.