கோவையில் விலங்கு பாதுகாப்பு மையத்தில் அடுத்தடுத்து புகார்கள்!

கோவையில் விலங்கு பாதுகாப்பு மையம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி ஒண்டிப்புதூர் மையத்தை ஆய்வு செய்யச் சென்ற பெண் தன்னார்வலர் மீனாட்சியை அறைக்குள் பூட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 31-ஆம் தேதி ஆய்வுக்குச் சென்ற SPCA ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பின் உரிமத்தை ரத்து செய்து, உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.