சூலூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. என்.எம். சுகுமார் மீது அவதூறு பரப்பிய உள்ளூர் மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிப்பு!
கோவை மாவட்டம், சூலூர் மேற்கு ஒன்றியம் / தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. கார்த்திக் காமராஜ், கோவை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று நாகமநாயக்கன்பாளையத்தில் குட்டை தூர்வாருவதற்கு எதிராகச் செயல்பட்ட ரகு alias துறைராஜ் என்பவரின் தூண்டுதலின் பெயரில், ‘IndiaTamil24*7’, ‘Dheeran Media’, மற்றும் ‘Tamil Punal’ ஆகிய உள்ளூர் சமூக ஊடகங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூலூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.எம். சுகுமார் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், ஆளுங்கட்சியின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் தவறான மற்றும் பொய்யான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வரும் மேற்கண்ட மீடியாக்கள் மீதும், அதற்குத் துணைபோனவர்கள் மீதும் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.”









Leave a Reply