ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் குடிக்க வந்த பெண் காட்டு யானை, சேற்றில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.என். பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணையில், சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தபோது சேற்றில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து, JCB மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், யானையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தி மருத்துவக் குழுவினர் சிகிச்சையும் அளித்தனர்.
சேற்றில் சிக்கிய யானையை மீட்க வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply