சனிக்கிழமை மாலை, கண்டாலா காட்டுப் பகுதியைக் கடந்து கர்ஜத் ரயில் நிலையம் நோக்கி வந்த கோலாப்பூர்–மும்பை கொய்னா எக்ஸ்பிரஸ் (11029) ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
ரயிலின் பிரேக் அமைப்பில் இருந்து திடீரென புகை வெளியேறியதுடன், பிரேக் பேடிலும் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
புகையைக் கண்ட சில பயணிகள் அவசரமாக ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றதால், சிறிது நேரம் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், பிரேக் அமைப்பை உடனடியாக ஆய்வு செய்தனர். பெரிய அளவில் சேதமோ ஆபத்தோ இல்லை என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply