பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், காட்டிலிருந்து வெளியேறிய காட்டெருமைகள் கூட்டமாக மெயின் சாலைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது!
பெரிய காட்டெருமைகளுடன் அதன் குட்டிகளும் சாலையின் நடுவே அச்சமின்றி நடந்து சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மேலும், காட்டெருமைகளின் நடமாட்டத்தைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில், சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று கீழே சாய்ந்து கிடப்பதையும், காட்டெருமை ஒன்று காருக்கு அருகே உரசிச் செல்வதையும் வீடியோ காட்சிகளில் காண முடிகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதால், பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி காட்டெருமைகள் சாலையைக் கடந்து சென்றன.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காட்டெருமைகளைக் கண்டால் அருகில் செல்லாமலும், அவற்றைத் தொந்தரவு செய்யாமலும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply