கோவை கண்ணப்ப நகர் பகுதியில் குடியிருப்போர் முன்னேற்ற சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா!

கோவை கண்ணப்ப நகர் பகுதியில், கோவை குடியிருப்போர் முன்னேற்ற சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
கண்ணப்ப நகர் தில்லை நகர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் கே.ஆர். செல்வகுமார் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.
விழாவில், தலைமை துணைத் தலைவரும், திருப்பதி வர்கி உரிமையாளருமான திருப்பதி சேகர், புதிய கிளையின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளர்ச்சிக் குழுத் தலைவர் பிரபாகரன், கண்ணப்ப நகர் கிளைத் தலைவர் ராஜேந்திரகுமார், செயலாளர் தினேஷ் மற்றும் பொருளாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், மகளிர் அணி நிர்வாகிகள், நல்லாம்பாளையம் கிளை நிர்வாகிகளான பொருளாளர் கனகராஜ், செயலாளர் பால்ராஜ், துணைச் செயலாளர் விங்கபாண்டி, ஆலோசகர்கள் பச்சமால், நாராயணன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், கண்ணப்ப நகர் பகுதி பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.