மலேசியாவில் உயர்கல்வி பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனின் கல்வி நிதி விவகாரம் தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயலக உயர்கல்வி உதவித்தொகை தொடர்பாக மாணவர் பாரதிதாசன் தனது நிதி பிரச்சினையை வெளிப்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
“மாணவர் பாரதிதாசனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால், அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு நிதி வழங்கவில்லை என்றால், திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மாணவர் பாரதிதாசனின் கல்விக் கட்டணத்தை செலுத்தி அவரை படிக்க வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மாணவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பாரதிதாசனின் கல்வி நிதி விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.










Leave a Reply