புழலில் பரபரப்பு! போதையில் இளம்பெண் ரகளை – சாலையில் சென்ற காரை மறித்து அட்டகாசம்!

சென்னை புழல் பகுதியில், போதையில் இருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவர் சாலையில் சென்ற வெள்ளை நிற காரை மறித்து ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலையின் நடுவே நின்று கொண்டு காரை மறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.