கோவை அதிமுகவில் அதிரடி மாற்றம் – புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு!

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை அதிமுகவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட பகுதி, வட்ட மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்ள நிலையில், கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க செ.ம.வேலுசாமி தரப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மற்றும் திறமையான நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்காத நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து புதிய நிர்வாகிகளுக்கான பட்டியல் தயாராகி வருவதாகவும், விரைவில் பகுதி, வட்ட மற்றும் வார்டு அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்களால் கோவை அதிமுகவில் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.