கோவை மாவட்டம்.

கோயம்புத்தூர் கோவை வெஸ்ட் லயன்ஸ் கிளப் மாவட்டம் 3242 C சார்பில் முன்னாள் தலைவர் MJF ஆர்.பெருமாள் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு சிறப்பு காலை உணவு வழங்கும் நிகழ்வு கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி ரோடு மேற்கு சாலையில் உள்ள மாநகராட்சி நைட் ஷெல்டர் 1 வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை
கலைச்செல்வி பெருமாள், மகன் ஆர்.பி. சுந்தரராமன், சினேகா சுந்தரராமன் மற்றும் மகள் ஆர்.பி. ரம்யா ஆகியோர் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF அலகு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறப்பு அழைப்பாளர்களாக செண்பகம்” HB ராஜா குமார்,சுவாமிநாதன், நாகராஜன் மற்றும் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைவர் லயன் வெங்கடகிருஷ்ணன், செயலாளர் லயன் சுதா மற்றும் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து, லயன் TGS பொன்னம்பலம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.