தீபாவளி போனஸ் கேட்டு தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வல்லம் வடகால் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும், கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நிறுவன வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் உரிய தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.