

கோவை கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் 100 மேசைகள், 100 பெஞ்சுகள், 20 ஆசிரியர் மேசைகள், 20 ஆசிரியர் நாற்காலிகள் மற்றும் 20 இரும்பு அலமாரிகள் வழங்கப்பட்டன.
கல்வி உபகரணங்களை Rtn. AKRFC டாக்டர் லீமா ரோஸ் மார்டின், MLA, இயக்குநர் – மார்ட்டின் குழுமம் மற்றும் நிர்வாக அறங்காவலர் – மார்ட்டின் அறக்கட்டளை வழங்கினார்.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை G. விக்னேஸ்வரி, மார்ட்டின் குழும CSR மேலாளர் A. ஜான்பால் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆலம் தலைவர் Rtn. ரகுநாதன் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த முயற்சி, மாணவர்களுக்கு வசதியான மற்றும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதுடன், பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.











Leave a Reply