₹28.5 கோடி CASH + 15 கிலோ GOLD!**ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுநர் வீட்டில் அதிரடி சோதனை!**

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில், ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் மினார் மண்டல் வீட்டில் இருந்து ரூ.28.5 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெயூச்சா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற நீண்ட நேர சோதனையில், 35 நைலான் பைகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணத்தை எண்ணுவதற்காக பல பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
மினார் மண்டல், வட வங்க மாநிலப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி, 2017ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவரது வீட்டில் இருந்து சுமார் 15 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரொக்கம் மற்றும் தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 கோடியை எட்டும் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணம் மற்றும் தங்கம் யாருடையது? எவ்வாறு இவ்வளவு பெரிய தொகை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மினார் மண்டல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.