கோவை இந்துஸ்தான் கல்லூரி விடுதியில் புழுக்கள் நிறைந்த தரமற்ற உணவு: மாணவ-மாணவிகள் நள்ளிரவில் திரண்டு போராட்டம்!

கோவை நவா இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்வி நிறுவன (இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி/கலை அறிவியல் கல்லூரி) விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு மற்றும் பூச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தரமற்ற உணவு வழங்கப்படுவதைக் கண்டித்தும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நள்ளிரவு மற்றும் பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.