தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்! செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய் – 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல்

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள “தாய்மாமன் தங்கமோதிரம்” திட்டத்தை, முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 22 முதல் செப்டம்பர் 28 வரை, நாள்தோறும் 107 மையங்களில் தலா 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் குழந்தை பிறந்த பின்னர், தாய் மற்றும் குழந்தை வீடு திரும்பும் நேரத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் வகையிலும், குடும்பங்களுக்கு ஆதரவாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.