“துரோகத்துக்கு இடைக்கால வெற்றி” – மு.க.ஸ்டாலின் கருத்து!

தேர்தல் வெற்றி, தோல்விகள் குறித்து கவலைப்படாமல் கொள்கை மற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி… பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை – இலக்கு எனப் பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளைக் கடந்து, கட்சியின் கொள்கை மற்றும் இலக்கில் உறுதியாகப் பயணிக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்டாலினின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.