பாதையை மாற்றாவிட்டால் தற்கொலை முயற்சி” என எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டம் சவுளுப்பட்டி கிராமத்தில், புதிய ரயில்வே பாதை திட்டத்திற்காக நில அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நில அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், புதிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டால் தங்களது வீடுகள் மற்றும் வாழ்வாதாரமாக உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ரயில்வே பாதையின் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சவுளுப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.