கோவையில் 100 நாள் மக்கள் சேவை சாதனை – தவெக சார்பில் பாராட்டு விழா

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் பணிகளைப் பாராட்டும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டக் கொள்கைப் பரப்பு அணி சார்பில் 100 நாள் மக்கள் சேவை சாதனை விருது பாராட்டு விழா நடைபெற்றது.

வடவள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடனும், அமைச்சர் சம்பத்குமார் அவர்களின் மக்கள் பணியைப் போற்றும் வகையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை மாவட்டக் கொள்கைப் பரப்பு அணி செயலாளர் பி.எஸ்.ஆர். தினேஷ் ராஜகோபால், இணைச் செயலாளர் வடவள்ளி கார்த்திக், நிர்வாகிகள் பிரபந்தன், பார்த்திபன், மனோகர் மற்றும் பேச்சாளர் மீசை ராம்தாஸ் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மக்கள் சேவை சாதனை பாராட்டு விழாவில், திரளான கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்பகுதி மக்களிடையே இந்த நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.