உக்கடத்தில் சிறப்பு பல் மருத்துவ முகாம்

கோவை: உக்கடம் வின்சென்ட் ஹவுசிங் யூனிட்டில், ஹெச்.டி.எஃப்.சி. பரிவர்த்தன் ஆன் வீல்ஸ் – ராம்கி ஃபவுண்டேஷன் மொபைல் மெடிக்கல் யூனிட் சார்பில் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு பல் மற்றும் வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்முகாமில், ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு பல் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பல், ஈறு தொடர்பான பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.

மேலும், முறையான பல் துலக்கும் முறை, வாய் சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் பல் நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஹெச்.டி.எஃப்.சி. பரிவர்த்தன் ஆன் வீல்ஸ் – ராம்கி ஃபவுண்டேஷன் மொபைல் மெடிக்கல் யூனிட் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே தொடர்ந்து மருத்துவ ஆலோசனை, உடல்நலப் பரிசோதனை மற்றும் சுகாதார விழிப்புணர்வு சேவைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முகாமில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.