தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர்!

தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்காகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலமாகவும் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை 13 கைதிகள் பிடிபட்டுள்ளனர். தப்பியோடிய மற்ற கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.