பெரியநாயக்கன்பாளையத்தில் கடன் மோசடி புகார்!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், கனரா வங்கி மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்ததாகத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் வங்கி மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது.
2 லட்சம் ரூபாய் கடன் தருவதாகக் கூறி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதாகவும், பெண்களை அறையில் அடைத்து மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டதாகப் புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை விசாரணைக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.