கோவில்பாளையத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ஐடி நிறுவனங்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ய கொண்டு வந்ததாக கூறப்படும் 21 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக 21 வயதான நந்தகுமார் என்பவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். ஐடி நிறுவனங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நந்தகுமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.