மகாபலிபுரத்தில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம்!

மகாபலிபுரத்தில் ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உள்ளிட்ட தென் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தென் மாநிலங்களுக்கிடையேயான முக்கிய விவகாரங்கள் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பங்கேற்ற முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றாக குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.