

கோவை மாநகரில் ஜெயின் கோவில் அருகே சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் அடங்கிய கைப்பையை திரு. விஜயானந்த் என்பவர் கண்டெடுத்துள்ளார்.
பணத்தை தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், நேர்மையுடன் B3 V.H. ரோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனிடையே, பணத்தை தவறவிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. நிர்மல் ராவல், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார்.
இதையடுத்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு, பணத்தின் உரிமையாளரை உறுதி செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் துணை ஆணையர் தெற்கு அவர்கள், ரூ.1.75 லட்சம் பணம் அடங்கிய கைப்பையை அதன் உரிமையாளர் திரு. நிர்மல் ராவல் அவர்களிடம் ஒப்படைத்தார்.
பணத்தை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த திரு. விஜயானந்த் அவர்களின் நேர்மையை காவல் துணை ஆணையர் தெற்கு அவர்கள் வெகுவாக பாராட்டி, கௌரவித்தார்.
நேர்மைக்கு கிடைத்த பாராட்டு… கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!









Leave a Reply