விழும் நிலையில் பள்ளி காம்பவுண்ட் சுவர்! மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா அரசு?

கோவை மாவட்டம், பீடம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ கிருஷ்ணசாமி நாயுடு அரசு மேல்நிலைப் பள்ளியின் காம்பவுண்ட் சுவர், இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுவரில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் விரிசல்கள் காரணமாக, எப்போது வேண்டுமானாலும் சுவர் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு தினமும் மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், அசம்பாவிதம் ஏற்படும் முன்பே சேதமடைந்த காம்பவுண்ட் சுவரை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பீடம்பள்ளி ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.