கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் போத்தனூர் வெள்ளலூர் ரோடு பகுதியில் முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது போத்தனூர் வெள்ளலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (63). கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவா, வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.சிவாவின் குடும்பத்தினருக்கும் பொன்னுசாமிக்கும் இடையே பணம் கொடுக்கல்,வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது கடந்த 2021-ம் ஆண்டு பொன்னுசாமி நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது ஸ்கூட்டரில் வந்த சிவா அவரை மோதுவது போல் சென்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த சிவா, பொன்னுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன் வீட்டிற்குச் சென்று கட்டையுடன் திரும்பி வந்து அவரை சரமாரியாக தாக்கியதாக வழக்கில் கூறப்பட்டது இதில் தலையில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி,தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இதுகுறித்து போத்தனூர் போலீசார் கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர் இந்த வழக்கு கோவை எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் இவ்வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடதக்கது.