தாய்லாந்தில் தங்கம் வென்ற கோவை வீரர் விக்னேஷ்!

கோவை: சுந்தராபுரத்தைச் சேர்ந்த S. விக்னேஷ், தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் நடைபெற்ற சர்வதேச வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் களமிறங்கிய கோவை வீரர் விக்னேஷ், சிறப்பான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
விக்னேஷின் இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கும், கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளது.