தூத்துக்குடி அருகே பரபரப்பு! எஸ்ஐ மீது தாக்குதல் – இருவருக்கு போலீஸ் வலை!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பஜார் பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி (59), இருவரையும் பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற இருவரும், காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பொன் முனியசாமி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.