2036 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், “மிஷன் ஒலிம்பிக் 2036” திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மயில்வாகனன் ஐபிஎஸ், மிஷன் ஒலிம்பிக் 2036-ன் சிறப்பு அதிகாரியாகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணை முதன்மை செயல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்திற்கு 15 பதக்கங்களை வெல்லும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக திறமையான விளையாட்டு வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட ஆதரவுகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
“மிஷன் ஒலிம்பிக் 2036” மூலம் தமிழகத்தின் விளையாட்டு திறனை உலக அரங்கில் உயர்த்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.










Leave a Reply