12 ஆண்டுகள் இராணுவ சேவைக்கு பின் ஓய்வு! ஜனாதிபதியின் ஏடிசியாக பணியாற்றிய மேஜர் ரிஷப் சிங் சம்பியால்

இந்திய இராணுவத்தில் சுமார் 12 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றிய மேஜர் ரிஷப் சிங் சம்பியால், 2026ஆம் ஆண்டு இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
4 பாரா சிறப்புப் படைகள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அவர், தனது அர்ப்பணிப்பு மற்றும் இராணுவ சேவையால் பரவலாக அறியப்பட்டார்.
மேலும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஏடிசி (Aide-de-Camp) ஆகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
சுமார் 12 ஆண்டுகால இராணுவப் பயணத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ள மேஜர் ரிஷப் சிங் சம்பியாலுக்கு, அவரது சேவைக்காக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.