ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில், இளைஞர் ஒருவரை ஜன்னல் கம்பியில் கட்டிவைத்து தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தற்போது மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.










Leave a Reply