அவிநாசி–கோவை பைபாஸ் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி சிலரிடம் திருநங்கைகள் பேசுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 7 மணி முதல் இரவு 11 மணி முதல் 12 மணி வரை, குறிப்பிட்ட பகுதியில் இதுபோன்ற நடமாட்டம் இருப்பதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி–கோவை பைபாஸில் இரவு நேர பரபரப்பு! வாகனங்களை நிறுத்தி திருநங்கைகள் பேசுவதாக புகார் – போலீஸ் விசாரணைக்கு கோரிக்கை

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply