புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் முதுகலை மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த 26 வயதான யோகலட்சுமி, வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அறையில் கிடைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தக் கடிதத்தில், தனது முடிவுக்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்றும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










Leave a Reply