2023ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மெக்சிகோவை உலுக்கிய ஒடிஸ் சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட அகாபுல்கோ நகரில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் மெக்சிகோ நகரத்தைச் சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரி அரிஸ்பெத் அம்ப்ரோசியோ.
அப்போது, இரண்டு நாட்களாக உணவு கிடைக்காமல் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தையை அவர் கண்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் தாயால் அப்போது உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, ஒரு தாயாக குழந்தையின் பசியை உணர்ந்த அரிஸ்பெத், தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் பசியை ஆற்றியுள்ளார்.
பேரழிவால் மக்கள் தவித்த நேரத்திலும் வெளிப்பட்ட இந்த மனிதநேய செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
அரிஸ்பெத்தின் இந்த செயலைப் பாராட்டிய மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம், அவருக்கு உடனடி பதவி உயர்வு வழங்கி கௌரவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பேரழிவிலும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்திய இந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.










Leave a Reply