நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், இருவரை அடித்துக் கொன்றதாக கூறப்படும் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று 18.09.2026 அந்த கூண்டில் புலி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் புலியின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது கூண்டில் சிக்கியுள்ள புலிதான் உயிரிழப்புகளுக்கு காரணமானதா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், புலியை பாதுகாப்பாக மீட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply