தெலங்கானாவில் மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கணவரின் வீட்டிற்கு திரும்பி வர அவர் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், அவரது மூக்கை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளனர். மேலும், குடும்பத் தகராறுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply