தமிழ்நாட்டிற்கு ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜயின் பிரிட்டன் பயணத்தின் போது, வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சம்வர்தனா மதர்சன் நிறுவனம் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம், திருவள்ளூரில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ரூ.300 கோடி முதலீடு உள்ளிட்ட திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த முதலீட்டு திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.










Leave a Reply